ஆறு நாட்களாக உயிருக்கு போராடும் யானை (Photos)
திருகோணமலை - பன்குளம் பகுதியில் யானை ஒன்று குழிக்குள் விழுந்து சுமார் ஆறு நாட்களாக மீட்கப்படாத நிலையில் உயிருக்குப் போராடி வருவதாகப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பன்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள வாய்க்கால் ஒன்றினுள் இவ்வாறு குறித்த யானை விழுந்து உயிருக்குப் போராடி வருவதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்த யானையைக் காப்பாற்ற முன்வருமாறு பொதுமக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
யானைக்கு என்ன நடந்தது பற்றித் தெரியாது எனவும் நாளை 16ஆம் திகதி வைத்திய குழுவொன்று பன்குளம் பிரதேசத்திற்கு வருகை தர உள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 9 அடி நீளமான யானை எனவும் 35 வயதுக்கு மேற்பட்ட வயது இருக்கலாம் எனவும்
அவர் மேலும் குறிப்பிட்டார்.





