மர்மமான முறையில் உயிரிழந்த யானை : விசாரணைகள் முன்னெடுப்பு
அறுவடை செய்யப்பட்ட வயல் பகுதியில் மர்மமாக உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட யானையின் சடலம் தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அம்பாறை (Ampara) மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை சின்ன கொக்கநாரை வயல் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (1) மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது.
மருத்துவ பரிசோதனை
யானையின் சடலம் இருப்பதை அவதானித்த விவசாயிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த யானையின் சடலம் மீட்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டது.

மேலும் குறித்த யானையின் இறப்பு தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன் யானையின் இறப்பிற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
அத்துடன் வனஜீவராசிகள் திணைக்களம் யானையின் மரணம் தொடர்பான காரணத்தை உடற்கூற்று மருத்துவ பரிசோதனையின் பின்னரே அறிய முடியும் என தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam