மயிரிழையில் உயிர்தப்பிய இளைஞர்கள்! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி (Video)
சுற்றுலா சென்ற இளைஞர்கள் குழுவொன்று கண்டி ஏரியை பார்வையிட சென்ற போது காட்டு யானையிடம் சிக்கி மயிரிழையில் உயிர்தப்பிய காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அநுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் சந்தி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்று கண்டி ஏரியை பார்வையிட வந்துள்ளனர்.
இளைஞர் குழு மகிந்த ஆரம்ப பாடசாலைக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது காட்டு யானையொன்று திடீரென இளைஞர்களை துரத்தியுள்ளது.
இதன்போது இளைஞர்கள் அருகில் இருந்த மரத்தில் ஏறி தனது உயிரை காப்பாற்றிக்கொண்டுள்ளதுடன், யானை அந்த இடத்தில் மிகவும் பதற்றமாக நடந்துகொண்ட விதத்தினையும் காணொளி எடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சில மணி நேரத்தின் பின்னர் காட்டு யானை அங்கிருந்து சென்றதையடுத்து, இளைஞர்கள் மரத்தில் இருந்து இறங்கி உயிரைக் காப்பாற்றிக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
