யானை தாக்குதலில் இளம் தாயார் பலி! தெய்வாதீனமாக உயிர்பிழைத்த 3 வயது குழந்தை
மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் 3 வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெய்வாதீனமாக உயிர்பிழைப்பு
குறித்த சம்பவமானது நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மகிழவெட்டுவானை சேர்ந்த 35 வயதுடைய ரவிச்சந்திரன் பசுபதி என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
வீட்டின் முற்றத்தில் சம்பவதினமான நேற்று இரவு7.00 மணியளவில் தனது 3 வயது பெண் குழந்தையுடன் தாய் இருந்துள்ள நிலையில் குடிமனைக்குள் உட்புகுந்த யானை அவர்கள் மீது தாக்கியதில் தாயார் ஸ்தலத்திலே உயிரிழந்ததுடன் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
இதனையடுத்து உயிர் தப்பிய குழந்தையை மீட்டதுடன் உயிரிழந்தவரின் சடலத்தையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

கொடூரமாக தாக்கிய குணசேகரன், ரத்தம் சொட்ட உயிருக்கு போராடும் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
