முல்லைத்தீவில் நூற்றுக்கும் மேற்பட்ட பயன்தரு தென்னை மரங்களை அழித்து நாசம் செய்த காட்டு யானைகள்
முல்லைத்தீவு - கேப்பாப்புலவு பகுதியில் நேற்றிரவு (10-10-2026) புகுந்த காட்டு யானைகள் நூற்றுக்கும் மேற்பட்ட பயன் தரு தென்னை மரங்களை அழித்து நாசம் செய்துள்ளன.
முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு கிராமத்திற்குள் வந்த காட்டு யானைகள் நூற்றுக்கு மேற்பட்ட தென்னை மரங்களை அழித்து நாசம் செய்துள்ளன.
அழிவடைந்த தென்னை மரங்கள்

குறிப்பாக கடந்த 2017ஆம் ஆண்டு குறித்த கிராமத்தில் மக்கள் மீள் குடியேறி தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக நடுகை செய்த தென்னை மரங்களே இவ்வாறு யானைகளால் அழிவடைந்துள்ளன.
இந்த பிரதேசத்தில் காட்டு யானைகள் புகுந்து அண்மையில் வீடு ஒன்றை சேதமாக்கியுள்ளதுடன், ஏற்கனவே தொடர்ச்சியாக இந்த பகுதியில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்திருப்பதாகவும், கிராமத்திற்கு யானை வேலி அமைத்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

