வான்எல - பனிச்சை ஆறு கிராமத்தில் காட்டு யானை அட்டகாசம்
வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயிலியடி பனிச்சை ஆறு கிராமத்தில் நேற்று இரவு புகுந்த காட்டு யானை ஒன்று, விவசாயி ஒருவரின் 15 ஆண்டுகால உழைப்பை ஒரே இரவில் தரைமட்டமாக்கியுள்ளது.
குறித்த காட்டு யானை மிக நீண்டகாலமாக இப்பகுதியில் அட்டகாசம் செய்து வருகின்றது.
பகல் நேரங்களில் மணியரசன் குளத்தின் நடுவே நின்றுகொள்ளும் இந்த யானை, இரவு 10 மணியானதும் கிராமத்திற்குள் ஊடுருவுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
இதனால் மக்கள் மாலை வேளைகளுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வரவும், தமது தோட்டங்களுக்குச் செல்லவும் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

தென்னந்தோட்டத்தில் பாதிப்பு
12க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம் நேற்று இரவு 10 மணியளவில் கிராமத்திற்குள் புகுந்த யானை, அங்குள்ள விவசாயி ஒருவரின் தென்னந்தோட்டத்தில் புகுந்து கோரத் தாண்டவமாடியுள்ளது.
இதில் 15 வருடங்களாக கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வளர்க்கப்பட்ட, பலன் தரக்கூடிய 12-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அடியோடு சாய்த்துச் சிதைக்கப்பட்டுள்ளன. இந்த அழிவு குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி, கிண்ணியா ஆயிலியடி கிராம சேவகர் மற்றும் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் வழங்கியுள்ளார்.

இருப்பினும், இதுவரை எந்தவொரு அதிகாரியும் நேரில் வந்து சேதங்களைப் பார்வையிடவோ, பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவோ இல்லை என அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
யானைத் தாக்குதலால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள், "அரசாங்கம் காட்டு யானைகளைப் பாதுகாப்பதில் காட்டும் அக்கறையை, எம்மைப் போன்ற விவசாயிகளைப் பாதுகாப்பதில் காட்டுவதில்லை. யானைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அதற்காக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைக்க அனுமதிப்பது முறையற்றது.
எங்களது முழு வாழ்வாதாரமே இந்தப் பயிர்ச்செய்கையை நம்பித் தான் இருந்தது, இன்று அனைத்தும் பறிபோய்விட்டது." என தெரிவித்துள்ளனர்.

காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri