மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் கிளிநொச்சியில் ஆரம்பித்து வைப்பு!
மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் இன்று(23) கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில், கரைச்சி பிரதேச சபையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
"சுற்றாடல் எம்மைக் காக்கும் நாம் சுற்றாடலைக் காப்போம்" எனும் தொனிப்பொருளில் 23.06.2025ஆம் திகதி தொடக்கம் 27.06.2025ஆம் திகதி வரை வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மின்கழிவு சேகரிப்பு
இந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு இலத்திரனியல் மற்றும் மின்கழிவு சேகரிப்பு நிகழ்வு கரைச்சி பிரதேச சபையில் இடம்பெறுகிறது.

நிகழ்வை கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வட மாகாண பணிப்பாளர் ஆர்.எம்.ஜல்டோட்டா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன், கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி திணைக்களத்தின் உள்ளூராட்சி உதவியாளர் மணிமேகலை, கரைச்சி பிரதேச சபை செயலாளர் த.ஞானராஜ் மற்றும் துறை சார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam