மின் கட்டணம் அதிகரிக்கும் அபாயம் குறித்து எச்சரிக்கை
நாட்டில் மின் கட்டணங்கள் அதிகரிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் மின்கட்டணத்தை சுமார் 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்த வேண்டிய நிலை உருவாகலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நிலக்கரியின் தரம் குறைவாக இருந்தால் உற்பத்தி செய்யக்கூடிய மின்சார திறன் தானாகவே குறையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய விஷயம் எனவும், இத்தகைய நிலை மின்சார உற்பத்தியை நேரடியாக பாதிப்பதுடன் நிதி சிக்கல்களையும் ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
சாதாரணமாக 10 கிலோகிராம் நிலக்கரியால் உற்பத்தி செய்யக்கூடிய மின்சார அளவு ஒன்று காணப்படும் என தெரிவித்துள்ளர்ர்.
எனினும் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலக்கரியை பயன்படுத்தினால், மின்சார உற்பத்தி சராசரியாக 20 சதவீதம் வரை குறைவாகவே உற்பத்தியாகிறது,” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலக்கரி தரமற்றது என்பதைக் அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். இதனால் பெரிய அளவில் இழப்புகள் ஏற்படுகின்றன என்றும் கூறினார்.
இறுதியில் அந்தச் சுமை முழுவதும் மக்களின் மேல், குறிப்பாக மின்சார நுகர்வோரின் மேல் விழும் எனவும் அவர் எச்சரித்தார்.
மேலும், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்திற்கு மின்கட்டண உயர்வை மேற்கொள்ள மின்சார சபை முன்மொழிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
நிலக்கரி பிரச்சினையால் ஏற்படும் கூடுதல் இழப்புகளை குறைக்க, மின்கட்டணம் மேலும் 15 முதல் 20 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan