மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் விசேட அறிக்கை
மின் கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மின்சார சபை மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை தமக்கு சமர்ப்பிக்கவில்லை என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளது.
மின்சாரக் கட்டண திருத்தம்
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவொன்று தனது ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்கை மின்சார சபை இவ்வாறான முன்மொழிவொன்றை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் இன்று (08.1.2024) வரை அவ்வாறான முன்மொழிவு ஆணைக்குழுவிற்கு கிடைக்கவில்லை எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு