அடுத்தக்கட்டப் போராட்டம் தொடா்பில் ஆலோசனை நடத்தி வரும் மின்சாரசபை தொழிற்சங்கங்கள்
“யுகதனவி” மின்சார நிலையப்பங்குகள் அமெரிக்க நிறுவனத்துக்கு கையளிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிடும் அமைப்புக்கள் தொடர்ந்தும் கலந்தாலோசனைகளை நடத்தி வருகின்றன.
நேற்று இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள், தமது எதிா்ப்பு போராட்டங்களை, ஆா்ப்பாட்டங்களால் ஆரம்பித்தன. இந்த ஆா்ப்பாட்டங்களில் ஏனைய தொழில்துறையினரும் பங்கேற்றனா்.
இந்தநிலையில் ஏற்கனவே அறிவித்தப்படி 72 மணித்தியாலப் போராட்டம் தொடா்பில் கலந்தாலோசனைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடா்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது.
இதேவேளை தாம் தொடா் கலந்தாலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்திச்சேவையிடம் குறிப்பிட்ட, மின்சார சபை தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவா் ரஞ்சன் ஜெயலால், தமது அடுத்தக்கட்ட நகா்வு தொடா்பில் அறிவிக்கப்படும் என்றும் தொிவித்தாா்.
