மின் கட்டண அதிகரிப்பு! முறைபாடின்றி தலையிட தயார்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் முறைப்பாடு இன்றி தலையிடத் தயாராகவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நிஹால் சந்திரசிறி இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால், அது தொடர்பில் முறைப்பாடு இன்றி தலையிடத் தயாராகவுள்ளோம்.
மக்களுக்கு நெருக்கடி
தற்போதைய பொருளாதார நெருக்கடிகளால் ஏற்கனவே சுமையுடன் இருக்கும் மக்களை மேலும் ஒடுக்குவதற்கு அரசாங்கத்திற்கோ அல்லது அதன் பங்குதாரர்களுக்கோ எந்த உரிமையும் இல்லை.
அதன்படி, ஜனவரி மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அல்லது இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்தால், அதற்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிடும்.” என தெரிவித்துள்ளார்.