மின் கட்டணத்தை குறைக்கும் அதிகாரம் அரசாங்கத்திடம் இல்லை: பிமல் ரத்நாயக்க
மின் கட்டணத்தைக் குறைக்கும் அதிகாரம் அரசாங்கத்திடம் இல்லை என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மின் கட்டண மாற்றத்திற்கான அதிகாரம்
அவர் மேலும் தெரிவிக்கையில், மின் கட்டணம் எதிர்காலத்தில் கூடுமா? குறையுமா என்பதைக் குறித்து என்னால் எதுவும் கூற முடியாது. ஏனெனில் மின் கட்டணத்தைக் கூட்டவோ, குறைக்கவோ அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை.
அதற்கான தீர்மானம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினாலேயே மேற்கொள்ளப்படும்.
அதே நேரம் தற்போதுள்ள நிலையில் மின்னுற்பத்திக்கான செலவை பிரதிபலிக்கும் வகையிலான மின்கட்டணமொன்றை நிர்ணயிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளமை உண்மை தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
