மின்சார கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்குமா! சபையில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
மின்சார கட்டணம் 18% ஆல் அதிகரிக்குமா என்பதை தெரியப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று(03.06.2025) உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணம்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், IMF விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் அடுத்த கட்ட தவணையைப் பெற மின்சாரக் கட்டணத்தை 18% ஆல் அதிகரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

இந்த தகவல் உண்மையா என்பதை தெரியப்படுத்துங்கள்.மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிக்குமா என்பதையும் அறியத்தாருங்கள்.
மேலும், IMF இன் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் அடுத்த தவணை கிடைக்கப்பெரும் திகதி யாது என்பதையும் தெரியப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam