ஜனவரி 15 ஆம் திகதி மின்சார கட்டண குறைப்பு முன்மொழிவுகள்
வழங்கப்படும்
என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முன்மொழிவுகள் பெறப்பட்ட பின், மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்படவுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின், மின் கட்டணத்தை குறைக்க பரிந்துரைகள் வழங்க
திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெப்ரவரி இரண்டாம் வாரத்தில் மின்சாரக் கட்டணக்
குறைப்பு
முன்மொழிவுகளுக்கு அனுமதி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள்
ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மின்சார சபையின் செயற்பாடுகளை சுயாதீன நிறுவனம் ஒன்றின் மூலம்
கணக்காய்வு செய்யும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுயாதீன
தணிக்கை ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
|