விரைவில் மின் கட்டணம் குறைய வாய்ப்பு - வெளியான தகவல்
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான யோசனை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வரும் 28 ஆம் திகதி ஒன்றுகூடவுள்ளது.
மின்சார கட்டண குறைப்பு
இலங்கை மின்சார சபையின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான யோசனை கடந்த 22 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த திருத்தத்தில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே மின் கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவு விரைவில் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தவறான புள்ளிவிபரங்களை முன்வைத்து மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |