மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று
2025ஆம் ஆண்டின் மூன்றாவது மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை இன்று (14) காலை அறிவிக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையானது (CEB), அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான்காவது காலாண்டிற்கான செலவுகளை ஈடுசெய்யும் பொருட்டு, மின் கட்டணங்களை 6.8 சதவீதம் அதிகரிக்குமாறு ஆணைக்குழுவிடம் முன்மொழிந்திருந்தது.
செலவுகள் அதிகரித்ததன் காரணமாகவே இந்த கட்டண உயர்வுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இறுதி முடிவு
இந்த கட்டணத் திருத்த முன்மொழிவு குறித்து நாடு முழுவதும் உள்ள அனைத்து மாகாணங்களிலும் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறும் செயல்முறையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேற்கொண்டது.
இந்த அமர்வுகளில் சுமார் 500 பேர் நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் தமது யோசனைகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பித்துள்ளனர்.
பொதுமக்களின் கருத்துகள் மற்றும் மின்சார சபையின் முன்மொழிவுகளை முழுமையாக ஆராய்ந்த பின்னர், நுகர்வோர் மற்றும் நாட்டின் பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மின் கட்டணங்கள் என்னவாக இருக்கும் என்பது குறித்த இறுதி முடிவு நாளை (14) காலை ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படவுள்ளது.
இந்த அறிவிப்பு, எதிர்வரும் மாதங்களில் நாட்டின் மின்சார விலை நிர்ணயத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
