அமைச்சர் ஒருவரின் நிலுவையிலுள்ள மின் கட்டணம்! வெளியான திடுக்கிடும் தகவல்
இலங்கையின் அமைச்சர் ஒருவரின் வீட்டின் மின்சாரக் கட்டணம் 1 கோடி 20 லட்சம் ரூபாவை எட்டியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு - கிருலப்பனை சரணங்கர வீதியிலுள்ள அமைச்சரின் வீட்டின் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த வீட்டின் மின்சாரக் கட்டணம் 1 கோடி 20 லட்சம் ரூபாவை எட்டியுள்ளது. இருந்தும் வீட்டின் மின்சாரத்தை துண்டிக்க மின்சார சபை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
பாதுகாவலர்களே வீட்டின் மின்சாரம் விநியோகத்துக்கு இடையூறாக இருந்தனர். இந்த நாட்டின் ஏழை மக்களின் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு முன்னர் இவ்வாறான அமைச்சர்களின் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொழும்பில் பிரபல ஹோட்டல் ஒன்றின் மின் கட்டண நிலுவைத் தொகை ஒரு கோடியைக் கடந்துள்ள போதிலும் அவற்றின் மின்சார இணைப்பு துண்டிக்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், அப்பக்கடைகள் தோசைக் கடைகளில் சிறிய மின் கட்டண நிலுவை இருந்தாலும் உடன் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் மின் கட்டண நிலுவை செலுத்த வேண்டியிருந்தால் உடன் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.



