இன்று முதல் கடுமையாக எடுக்கப்படப் போகும் நடவடிக்கை..! தீர்மானம் குறித்து வெளியான தகவல்
மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டால் இன்று முதல் மறு அறிவித்தல் இன்றி பாரிய தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்தால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டால் மறு அறிவித்தல் இன்றி இன்று முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக குறித்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam