இலங்கையில் மேலும் உயர்த்தப்படும் மின்சார கட்டணம்..!
சர்வதேச நாணய நிதியத்தின் யோசனையின் பிரகாரம் 30 வீதத்தினால் மேலும் மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரசபை தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
சமூக பாதுகாப்பு வரி சேர்ப்பு
மின்சாரக் கட்டணங்களில் சமூகப் பாதுகாப்பு வரி சேர்க்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய ஏற்கனவே 75 முதல் 200 வீதம் வரையில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த 15ம் திகதி முதல் சமூகப் பாதுகாப்பு வரி என்ற பெயரில் மேலும் 2.56 வீதம் அறவீடு செய்யப்படுகிறது.
மேலும் கட்டண உயர்வு
எனினும், இந்த வரி பற்றிய விபரங்கள் தனியாக கட்டணப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
இவ்வாறான ஓர் பின்னணியில் மின்சாரக் கட்டணங்களை மேலும் 25 வீதமாக உயர்த்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் பரிந்துரை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.