மின் கட்டண உயர்வு: ஆகஸ்ட் 29 விவாதம்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு (திருத்தம்) சட்டமூலம் மீதான விவாதத்துக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 30, 31 மற்றும் செப்டெம்பர் 1, 2 ஆகிய திகதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை விவாதம் நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு முடிவு செய்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் 29ஆம் திகதி காலை 9.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மின்சார கட்டணம் அதிகரிப்பு
நேற்றைய தினம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருத்தப்பட்டுள்ள மின் கட்டணத்துக்கு அமைய, 1 முதல் 30 வரையான அலகுகளில், ஒரு அலகிற்கு 2 ரூபா 50 சதமாக காணப்பட்ட கட்டணம், 8 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தார்.
அத்துடன் 31 முதல் 60 வரையான அலகுகளில், ஒரு அலகிற்கு 4 ரூபா 85 சதமாக காணப்பட்ட ஒரு அலகிற்கான கட்டணம், 16 ரூபாவாகவும், 61 முதல் 90 வரையான அலகுகளில், ஒரு அலகிற்கு 7 ரூபா 85 சதமாக காணப்பட்ட ஒரு அலகிற்கான கட்டணம், 16 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் 91 முதல் 180 வரையான அலகுகளில், 27 ரூபாவாக காணப்பட்ட ஒரு அலகிற்கான கட்டணம், 50 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் கட்டண அதிகரிப்பு! மின் அலகுகளுக்கான கட்டணம் தொடர்பில் தெளிவான விபரம் |