இலங்கையில் மிக உயர்ந்த புகை சீராக்கியுடன் கூடிய மின் தகனசாலை (PHOTOS)
மட்டக்களப்பில் மிக உயர்ந்த புகை சீராக்கியுடன் நிர்மாணிக்கப்பட்ட மின் தகனசாலையை மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக அவசிய தேவையாக காணப்படும் மின் தகனசாலையினை அமைக்க வேண்டும் என முன்னெடுக்கப்பட்ட முயற்சியின் பேறாக கள்ளியங்காடு இந்து மயான வளாகத்தில் குறித்த மின் தகன சாலையினை அமைப்பதற்கான நிர்மாணப் பணிகளைக் கடந்த வருடம் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மின் தகனசாலையின் செயற்பாடுகள் ஆரம்பம்
மட்டக்களப்பு மாநகர சபையின் 40 மில்லியன் ரூபாய் செலவில் இலங்கையில் மிக உயர்ந்த புகை சீராக்கியுடன் (80M), அதிநவீன உபகரணங்களுடன் சுற்று சூழல்ப்பாதுகாப்பு அங்கீகாரத்தினை பெற்று மின் தகனசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த மின் தகனசாலையின் செயற்பாடுகளைத் தேர்தல் விதிமுறைகளுக்கு அமைய மாநகர ஆணையாளர் நா.மதிவண்ணன் நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
அதற்கமைய அங்கு மேலதிகமாக அமைக்க வேண்டியுள்ள சுற்று மதில் தொடர்பாகவும், மீதமாகவுள்ள இறுதிக்கட்ட வெளியக வேலைகள் தொடர்பாகவும் ஆராயும் பொருட்டு நேற்றைய தினம் உறுப்பினர்கள் சகிதம் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் கள விஜயமொன்றினை மேற்கொண்டு ஆராய்ந்துள்ளார்.


Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri