மாற்றுத்திறனாளி ஒருவரின் வாக்கை தவறாக பதிவிட்ட தேர்தல் அலுவலர்!
மாற்றுத்திறனாளி ஒருவர் தனது வாக்கை தொலைபேசி சின்னத்துக்கு புள்ளடியிடுமாறு கோரிய நிலையில், தேர்தல் அலுவலர் வேண்டுமென்றே திசைகாட்டிக்கு புள்ளடியிட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
அநுராதபுரம், கஹடகஸ்திகிலிய முஸ்லிம் வாக்குச் சாவடியிலேயே இந்த முறைகேடு நடைபெற்றுள்ளது.
அங்கு வாக்களிக்க வந்த ஒரு மாற்றுத்திறனாளி, தனக்கு சுயமாக வாக்களிக்க முடியாத நிலையில் உதவியாளர் ஒருவரின் துணையை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.
முறைகேடு
அதன்போது வாக்குச் சாவடியில் கடமையில் இருந்த அலுவலர் ஒருவர் குறித்த மாற்றுத்திறனாளிக்கு ஒத்தாசை செய்ய முன்வந்துள்ளார்.
எனினும் வாக்காளர் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்துக்கு புள்ளடியிடச் சொன்ன போது அதற்குப் பதிலாக தேர்தல் அலுவலர் தேசிய மக்கள் சக்தியின் திசைகாட்டிக்கு புள்ளடியிட்டுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட வாக்காளரின் முறைப்பாட்டின் பேரில் அவருக்கு புதிய வாக்குச் சீட்டு வழங்கப்பட்டு, அவர் தொலைபேசி சின்னத்துக்கு வாக்களித்துள்ளார்.