நாட்டில் ஜனநாயக ஆட்சி நடைபெற வேண்டுமானால் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் : சாள்ஸ் எம்.பி
மக்கள் ஆணை பெற்ற ஜனநாயக ஆட்சி நாட்டில் நடைபெற வேண்டுமாக இருந்தால் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் - விசுவமடு பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டு கடிதங்களை பொது அமைப்புக்களிடம் கையளிக்கும் நிகழ்வும், சந்திப்பும் இன்று(02.06.2024) பிற்பகல் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்பு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசியல் மாற்றங்கள்
தொடர்ந்து தெரிவிக்கையில், 2019ஆம் ஆண்டு நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் ஜனாதிபதி ஒருவர் பதவியேற்க வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலும் நடாத்தப்பட வேண்டும். காரணம் நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

தற்போது மக்களிடம் ஆணையைப் பெற்று நாட்டை வழிநடாத்த வேண்டும். அதனை மக்கள் ஆணை மூலம் கொண்டு செல்வதுதான் ஜனநாயகம் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri