உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: இன்று முதல் வேட்புமனு தாக்கல்
இவ்வாண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்யும் பணி இன்று முதல் (18.01.2023) ஆரம்பமாகவுள்ளது.
குறித்த வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கட்டுப்பணம் செலுத்தும் பணிகள் கடந்த 4ஆம் திகதி ஆரம்பமான நிலையில் நாளை மறுதினம் (20.01.2023) வரை நடைபெறவுள்ளது.

இலங்கை உள்ளூராட்சி தேர்தல்
மேலும், வேட்புமனுக்களை தாக்கல் செய்த பின்னர் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதுவரை தேர்தலுக்காக 29 அரசியல் கட்சிகளும் 52 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 08.30 மணி முதல் மாலை 04.15 மணி வரை அந்த கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளதாகவும், 50 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை 52 சுயேட்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 6 நாட்கள் முன்
சிறைச்சாலை மோதல்கள்! உயர் அதிகாரிகளுக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் - எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கைகள்
காலி கடற்பரப்பில் குவிந்துள்ள 16 ஈரானிய கப்பல்களால் சர்ச்சை.. இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய ஆபத்து