முல்லைத்தீவில் இடம்பெற்ற தேர்தல் சட்டமீறல்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தல் நெறிமுறைக்கு மாறாக இடம்பெறும் பிரசார நடவடிக்கைகளை தேர்தல்கள் கண்காணிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (09.11.2024) பிற்பகல் இடம்பெற்ற எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னாயத்த கூட்டத்திலேயே குறித்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச கட்டடங்கள் மற்றும் பாலங்கள், வீதிகள், மின்கம்பங்கள் போன்றவற்றில் தேர்தல்கள் சட்டத்திற்கு முரணான வகையில் வேட்பாளர்களது சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை, கட்சிகளது சின்னங்கள், வேட்பாளர்களது விருப்பு இலக்கங்கள் வரையப்பட்டுள்ளமை தொடர்பில் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை
அத்துடன், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, வாக்களிப்பு நிலையங்களிற்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்ட வேட்பாளர்களது சுவரொட்டிகள் வாக்களிப்பு தினத்திலும் அகற்றப்படாமல் இருந்தமை தொடர்பிலும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இதுபோன்ற நிலைமைகள் ஏற்படாமல் இருக்க விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் இதன்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென முல்லைத்தீவு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் பி.ரகுநாதன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல் Cineulagam
