தேர்தல் முறைகளை மாற்றியமைக்க வேண்டும்! ரவி கருணாநாயக்க
செலவுகளை மேலும் குறைக்கும் வகையில் தேர்தல் முறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று புதிய ஜனநாயக்க முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் திருத்தச் சட்டம்
நாடாளுமன்றத்தில் நேற்று(14.02.2025) உள்ளூராட்த் தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் அறிவித்த பின்னர் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,''உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தினால் அவர்களின் வியாக்கியாணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செலவுகளை மேலும் குறைக்கும் வகையில் தேர்தல் முறைகளை மாற்றியமைக்க வேண்டும். மக்களிடையே இவ்வாறான செலவுகளை தாங்கிக்கொள்ள முடியுமா என்ற பிரச்சினைகள் உள்ளன.
முறைகள்
இதனால் செலவுகளை குறைக்கக் கூடிய முறைகள் உள்ளனவா என்று அரசாங்கத்திடம் கேட்கின்றோம்.

மேலும் இந்த விடயத்தில் இதற்கு முன்னர் 8900 பேரின் செலவுகள் மற்றும் 2900 மில்லியன் ரூபா செலவிடும் பிரச்சினை தொடர்பில் கதைத்துள்ளோம்.
இந்நிலையில் தற்போது முடிந்தளவு செலவுகளை குறைத்துக்கொண்டு செல்கையில் இந்த விடயத்தில் இதற்கு மேலும் செலவுகளை தாங்கிக்கொள்ளக் கூடிய தேர்தல் முறையை உருவாக்க முடியாதா?'' என கேள்வி எழுப்பியுள்ளார்.
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பற்றி எரியும் எண்ணெய் முனையம்- அமீரகத்தின் முக்கிய துறைமுகத்தை நோக்கி ட்ரோன் தாக்குதல் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam