தேர்தல் சீர்திருத்தம் குறித்து ஆராயும் விஷேட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்?
மாகாணசபை தேர்தல் சட்டத்தை திருத்தி, பழைய விகிதாசார முறையில் மாகாணசபை தேர்தலை நடத்தும்படியான யோசனையை அரசுக்கு முன் வைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று கூடிய தேர்தல் முறை சீர்திருத்த குழுவில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி தேர்தல் முறையிலும் சில சீர்திருத்தங்களை செய்யவும் யோசனையை அரசுக்கு முன் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத் தீர்மானம் குறித்து அடுத்த கூட்டம் 22ம் திகதி நடைபெறும் போது, இவை பற்றி ஆய்வு செய்து முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 8 மணி நேரம் முன்
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam