ரவி கருணாநாயக்க தலைமையில் வவுனியாவில் விசேட கலந்துரையாடல்
தேர்தல்களை எதிர்கொள்வது தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க தலைமையில் வவுனியா மக்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (24.03.2024) நடைப்பெற்றுள்ளது.
வவுனியா மாவட்டம்
இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ரவி கருணாநாயக்க கலந்து கொண்டு கருத்துரைகளை தெரிவித்துள்ளார்.
வன்னித் தேர்தல் தொகுதியில் வவுனியா மாவட்டத்தில் அதிக மக்கள் உள்ள நிலையில் இந்த மாவட்டத்தில் சரியான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. இதற்காக அடுத்த தேர்தலை சரியாக கையாள்வது தொடர்பிலும், பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார்.
இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி தேர்தல் தொகுதி அமைப்பாளர் ம.மயூரதன், ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட மட்ட உறுப்பினர்கள், பல்வேறு சுயேட்சைக் குழுக்களில் கடந்த காலங்களில் போட்டியிட்டவர்கள் எனப்பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
