தேர்தல் முடிவுகள் தோல்வியிலும் வெற்றியை தந்துள்ளது: டக்ளஸ்

Eelam People's Democratic Party Douglas Devananda Local government election Sri Lanka 2025
By Kajinthan May 13, 2025 10:51 AM GMT
Report

தோல்வியிலும் வெற்றி என்ற நிலையில் தான் தற்போது நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபை தேர்தலின் பெறுபேறுகள் அமைந்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உள்ளூர் அதிகார சபையில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பிரதேச பொறுப்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தோரை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய வேளையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கட்சியின் தேர்தல் அடைவு நிலை குறித்து ஆராய்ந்ததுடன் கிடைத்த வெற்றிகளை மூலதனமாக கொண்டு அடுத்த கட்டம் நோக்கி முன்னேறிச் செல்வது குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போலி வாக்குறுதி

குறித்த கலந்துரையாடலில் மேலும் கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம், உசுப்பேற்றியோ, போலி வாக்குறுதிகளையோ போதை ஏற்றும் சன்மானங்களையோ வாக்காளர்களுக்கு கொடுத்திருக்கவில்லை.

தேர்தல் முடிவுகள் தோல்வியிலும் வெற்றியை தந்துள்ளது: டக்ளஸ் | Election Results Brought Success Even In Defeat

நாம் வழமை போன்றே எமது நிலைப்பாடுகளை வெளிப்படையாக கூறி மக்களிடம் சென்றிருந்தோம். அதன் முடிவுகள் வந்துள்ளன. அவை எமக்கு சர்பாக இல்லாவிடினும் கிடைத்தவை தோல்வியிலும் வெற்றிக்கான சமிக்ஞையாகவே இருக்கின்றது.

ரணில் போல் அநுரவுக்கு தற்றுணிவு கிடையாது! முன்னாள் அமைச்சர் விமல் விளாசல்

ரணில் போல் அநுரவுக்கு தற்றுணிவு கிடையாது! முன்னாள் அமைச்சர் விமல் விளாசல்

கட்சியின் முடிவு

அதேநேரம் ஆட்சியில் பங்கெடுக்கும் விருப்பம் எமக்கில்லை. குறிப்பாக தேசிய மக்கள் சக்தி என்ற ஜே.வி.பியிடம் தேசிய நல்லிணக்கம், இனங்களுக்கிடையிலான நல்லுறவு என்பது அறவே இல்லாது போய்விட்டதுடன் அது மறுக்கப்படுள்ளமையால் உள்ளூர் அதிகார சபைகளில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவை நாம் வழங்கப்போவதில்லை.

தேர்தல் முடிவுகள் தோல்வியிலும் வெற்றியை தந்துள்ளது: டக்ளஸ் | Election Results Brought Success Even In Defeat

இதுவே கட்சியின் முடிவாகவும் இருக்கின்றது. அதேநேரம் ஏனைய தமிழ் கட்சிகளுக்கான ஆதரவும் அவர்கள் அதிகாரபூர்வமாக கோரும் பட்சத்தில் சூழ்நிலையை கருத்தில் கொண்டே எடுக்கப்படும். குறிப்பாக இது கட்சியின் எதிர்காலம் மற்றும் மக்களின் நலன்களுடன் தொடர்புடையதாகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US