அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்க ஏற்பாட்டாளர் தெரிவில் மோசடி: பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு
அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்க ஏற்பாட்டாளர் தெரிவில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக பிமல் ரத்நாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
ஜே.வி.பி.யின் பிரதானிகளில் ஒருவரான பிமல் ரத்நாயக்க இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்க ஏற்பாட்டாளர் தெரிவு வாக்கெடுப்பு மூலம் நடைபெறவிருந்தது.
வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்பட்டது

எனினும் வாக்கெடுப்பு நிலையத்தை சில மணி நேர குறுகிய அவகாசத்தில் மாற்றியதுடன், ஒரு சில பல்கலைக்கழகங்களின் மாணவ சங்கங்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்பட்டது.
அதன் மூலம் மோசடியான முறையிலேயே இந்தத் தெரிவு நடைபெற்றுள்ளது. இதற்கு முன்னரும் அண்மைக்காலமாக இவ்வாறான மோசடிகள் இடம்பெற்றுள்ளது.
இப்படியான செயற்பாடுகள் மாணவர் சங்கம் தொடர்பான நம்பிக்கையை சீர்குலைப்பதுடன், மாணவர்களை அடக்க நினைக்கும் தரப்புகளுக்குச் சாதகமாகவும் அமைந்துவிடும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam