முதலமைச்சராக அரியனையில் அமர்ந்த அடுத்த நொடியே விஜய் வழங்கிய முதல் நியமனம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதனையடுத்து பாதுகாப்புப்படைகள் சூழ அரசு வாகனத்தில் முதலமைச்சராக பதவியேற்ற தவெக தலைவர் விஜய் தலைமை செயலகத்தில் அரியனையில் சற்றுமுன்னர் அமர்ந்த நிலையில் சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. கருப்பையா தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாளை கூடும் சட்டப்பேரவை
2011-16ல் அதிமுக எம்.எல்.ஏ ஆக இருந்த இவர், நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தவெகவில் இணைந்து போட்டியிட்டு வென்றுள்ளார்.

தமிழ்நாடு 17வது சட்டப்பேரவை நாளை காலை 9.30 மணிக்கு கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தற்காலிக சபாநாயகரின் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க உள்ளனர்.
நாளை மறுதினம் புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது.
"ஜோசப் விஜய் என்னும் நான்.." நேரு உள்விளையாட்டு அரங்கில் குவியும் முக்கிய புள்ளிகள் - தயார்நிலையில் பலத்த பாதுகாப்பு வலயம்
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam