அபிவிருத்தி சார் வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி தேர்தல் தடையாக இருக்காது : டக்ளஸ் தெரிவிப்பு
அபிவிருத்தி சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் தடையாக இருக்காது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (26-07-2024) நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க வேலைத்திட்டங்கள்
மேலும் தெரிவிக்கையில், ” ஜனாதிபதி தேர்தல் விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையகத்துடன் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொண்டுள்ளோம்.
எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு பின்னர், அரசாங்க வேலைத் திட்டங்கள் முன்னெடுககப்படும் போது, வேட்பாளர்களு்க்கு ஆதரவாகவோ அல்லது எதிராக அவை பயன்படுத்தப்படுமாயின், தேர்தல்கள் ஆணைக்குழு தமது கரிசனையை வெளிப்படுத்தும்“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக
மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |