எப்போது தேர்தலை நடத்த வேண்டும்...! மஹிந்தவின் ஆலோசனை- செய்திகளின் தொகுப்பு
நாட்டில் தற்போது நிலவி வரும் நெருக்கடி நிலையை தீர்த்து தேர்தலை நடத்த வேண்டும் என முன்னாள் பிரதமரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சியில் உள்ள பலர் பேசினாலும், தற்போதைய காலம் அதற்கு உகந்தது அல்ல என்பதே தமது கருத்து என தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன உறுப்பினர்களுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
மக்கள் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் இருப்பதாகவும், அவர்களால் தேர்தல் மனப்பான்மையை வளர்க்க முடியாது எனவும் தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளுடன் வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam