வடக்கில் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி

Mannar Election
By Ashik May 05, 2025 08:18 PM GMT
Report

மன்னார் மாவட்டத்தில் நாளை செவ்வாய்க்கிழமை(6) இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (5) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வியட்நாம் ஜனாதிபதியால் அநுரவுக்கு அமோக வரவேற்பு- இரு தரப்பு பேச்சுகளும் முன்னெடுப்பு

வியட்நாம் ஜனாதிபதியால் அநுரவுக்கு அமோக வரவேற்பு- இரு தரப்பு பேச்சுகளும் முன்னெடுப்பு

வாக்களிக்க தகுதி

மன்னார் மாவட்டத்தில் 91 ஆயிரத்து 373 வாக்காளர்கள் இம்முறை வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வடக்கில் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி | Election In Mannar District

5 உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தும் 88 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். மன்னார் நகர சபையில் 18 உறுப்பினர்களும்,மன்னார் பிரதேச சபையில் 23 உறுப்பினர்களும்,நானாட்டான் பிரதேச சபையில் 19 உறுப்பினர்களும்,முசலி பிரதேச சபையில் 19 உறுப்பினர்களும்,மாந்தை மேற்கு பிரதேச சபையில் 24 உறுப்பினர்களும் உள்ளடங்களாக கட்சி மற்றும் சுயேற்சைக் குழு சார்பாக 103 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.

அவர்களில் மன்னார் நகரசபைக்கு 15 உறுப்பினர்களும், மன்னார் பிரதேச சபைக்கு 20 உறுப்பினர்களும் ,நானாட்டான் பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்களும், முசலி பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்களும் ,மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 21 உறுப்பினர்களுமாக மொத்தம் 88 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்" என கூறியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய ஆபத்தான ஐவர் தலைமறைவு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய ஆபத்தான ஐவர் தலைமறைவு

கிளிநொச்சி

நாளைய தினம் நடைபெவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்காக கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 வாக்களிப்பு நிலையங்களுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் இருந்து 108 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பட்டிகள் இன்று காலை முதல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவட்ட அரச அதிபர் குறிப்பாக சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பட்டிகளும் எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன மக்கள் நேர காலத்துடன் சென்று தங்களது வாக்குகளை அளிக்குமாறு தெரிவித்துள்ளதுடன் பொலிஸார் மற்றும் விசேட பாதுகாப்பு கடமைகளிலும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

செய்தி - யது

முல்லைத்தீவு 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1291 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட செயலாளருமான அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (05.05.2025) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், சுதந்திரமானதும், நேர்மையானதுமான தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்றும்,  முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் , மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தலாக இது அமைவதுடன் 41 வட்டாரங்களை உள்ளடக்கி காணப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

செய்தி - ஷான்

வவுனியா

வவுனியா மாவட்டத்தில் 1605 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும், அரச அதிபருமான பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுதந்திரமானதும், நேர்மையானதுமான தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஒரு மாநகரசபை மற்றும் நான்கு பிரதேச சபைகளுக்காக 103 பேர் தெரிவு செய்யப்பட்டவுள்ளனர்.

இதற்காக 1731 பேர் போட்டியிடவுள்ளனர். ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 293 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்" என்றார்

செய்தி திலீபன்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNELஇல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US