அதிகரிக்கும் தேர்தல் சட்ட மீறல்கள்! தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2863 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் (07) வரை இந்த முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சட்ட மீறல்கள்
இவற்றில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 2775 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1041 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையத்திற்கு 1822 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் அதிகரித்து வரும் தேர்தல் முறைப்பாடுகளில் 12113 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டு 750 முறைப்பாடுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam