தொடர்ந்து பதிவாகும் தேர்தல் முறைப்பாடுகள்!
கடந்த 24 மணிநேரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 5 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேர்தல்
தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள் மற்றும் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இவ்வாறு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவங்கள் தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் வேட்பாளர் ஒருவரும் 6 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அத்துடன், இதுவரையில் 15 வேட்பாளர்களும், 52 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முறைப்பாடுகள்
இதனிடையே, கடந்த 3 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் தேர்தல் சட்டத்தினை மீறியமை மற்றும் வன்முறைகள் தொடர்பில் 127 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் 12 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த மாதம் 20 ஆம் திகதியிலிருந்து இதுவரையில் 1,206 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam

சிறிய தீவில் 2 சடலங்களும் 39 புலம்பெயர் மக்களும்... கண்டுபிடித்த கிரேக்க கடலோர காவல்படை News Lankasri
