தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டியல் உறுப்பினர்களை பெயரிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஏழு நாட்களுக்குள் இந்த பட்டியல் உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை வழங்குமாறு அறிவித்துள்ளது.
கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேட்சை குழுக்களின் தலைவர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களை நிறுவும் நடவடிக்கை
பட்டியலில் உறுப்பினர்களை பெயரிடும் போது பெண் உறுப்பினர்கள் தெரிவு தொடர்பில் வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் கிடைக்கப் பெற்றதும், ஏற்கனவே தேர்தலில் வட்டாரங்களில் வெற்றியீட்டிய வேட்பாளர்களின் பெயர்களுடன் இணைத்து வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் 2ம் திகதி உள்ளுராட்சி மன்றங்கள் நிறுவும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 21 மணி நேரம் முன்

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
