பசில் ராஜபக்சவை கடுமையாக சாடிய இராஜாங்க அமைச்சர்
எந்த தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கு பசில் ராஜபக்ச தேர்தல்கள் ஆணையாளரல்ல, அரசியலமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
கொழும்பில் நேற்று(28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கத்தை தற்போது பொறுப்பேற்க தயார் என குறிப்பிடும் தரப்பினர் 2022 ஆம் ஆண்டு ஓடி ஒளிந்ததை மறந்து விடக் கூடாது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை நாங்கள் தோற்றுவிப்போம்.அவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்.
பாரிய நெருக்கடி
ஐக்கிய மக்கள் சக்தியினரும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தில் நாடு பாரிய நெருக்கடிக்கடியில் இருந்து மீண்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை.நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவே மைத்திரிபால சிறிசேன,ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரை தவறாக வழிநடத்தினார் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என தெரிவித்துள்ளார்.
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan