தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்
தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) பொலிஸ் மா அதிபராக செயற்படுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணைக்குழு சிக்கலுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் திணைக்களம் தேர்தல்களை நடத்துவதற்கு அவசியமான ஒரு முக்கிய அரசாங்க அமைப்பாகும்.
குறிப்பாக, ஆணைக்குழு, தமது உத்தரவுகளை நிறைவேற்றுமாறு பொலிஸ் திணைக்களத்துக்கே பணிப்புரையை வழங்க முடியும்.
அடுத்தக்கட்ட நடவடிக்கை
எனவே, நாளைய தினம் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர், நிரந்தரமாக செயற்படக்கூடிய பொலிஸ் மா அதிபர் தேவை என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆராய்ந்து அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தீர்மானிக்கும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு அந்த ஆராய்வை அனுப்பி வைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஆய்வு சட்டமா அதிபரிடம் பரிந்துரைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |