தேர்தல் ஆணைக்குழுவின் அவசர அறிவிப்பு
இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இன்று (ஜூலை 7) முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக இடைநிறுத்தம், தற்போது நடைபெற்று வரும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளின் காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து ஒன்லைன் சேவைகளும்
இதனால், கீழ்க்காணும் அனைத்து ஒன்லைன் சேவைகளும் மறு அறிவிப்பு வரை பயன்பாட்டில் இருக்காது:
• வாக்காளர் பதிவு விவரங்களை சரிபார்க்கும் வசதி
• ஒன்லைன் வழியாக வாக்காளராக பதிவு செய்யும் சேவை
• வாக்காளர் அறிக்கைகள் பெறும் வசதி
• மாவட்டங்களுக்கு இடையிலான கோரிக்கைகள்
தேர்தல் ஆணைக்குழு, நிலைமை சீரானதும் சேவைகள் மீளத் தொடங்கும் எனவும், அதுகுறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
