ஐந்து ஜனாதிபதி மற்றும் 74 நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்
நாடாளுமன்ற தேர்தல் செலவுக்கான அறிக்கைகளை சமர்ப்பிக்காத 05 ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் 74 நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் செலவுக்கான அறிக்கைகளை சமர்ப்பிக்காதது தொடர்பாக 13 ஜனாதிபதி வேட்பாளர்களிடமிருந்தும் 695 நாடாளுமன்ற வேட்பாளர்களிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக பொலிஸ் தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், 833 நாடாளுமன்ற வேட்பாளர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ளனர், மேலும் 86 வேட்பாளர்கள் தொடர்பான தகவல்களை நீதிமன்றங்களுக்கு அறிக்கை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்கள்
2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களில் இது தெரியவந்துள்ளது.
அதன்படி, தற்போது, 05 ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் 74 நாடாளுமன்ற வேட்பாளர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்வதற்கான ஆலோசனைக்காக வழக்கு கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை பெற்றுக் கொள்ள சட்ட மா அதிபருக்கு அனுப்பப்படவிருந்த 394 வழக்கு கோப்புகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக பொலிஸ் சட்டப் பிரிவால் மீண்டும் காவல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தேர்தலுக்கான செலவு
இதற்கிடையில், 2024 செப்டம்பர் 21 அன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவு அறிக்கைகளை 13 வேட்பாளர்களும், அதே ஆண்டு நவம்பர் 14 அன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான 1,042 வேட்பாளர்களும் தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி தங்கள் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணைக்குழு இலங்கை பொலிஸ் தரப்புக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இதற்கமைய ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்களும், நாடாளுமன்றத் தேர்தலில் 8,888 வேட்பாளர்களும் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.





சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்தியை உங்களுக்கு நினைவு இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
