அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள பொலிஸார்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக மாகாணங்களின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
அத்துடன், சிரேஷ்ட பிரதி தேர்தல்கள் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றும் இதில் இணைந்து கொள்ளவுள்ளது.
பாதுகாப்பு கடமை
11 மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக அதிகாரிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
ஏனைய மாவட்டங்களுக்கும் இன்றுஸஅதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நிர்வாக விவகாரங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.
you may like this





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக? News Lankasri
