நாடு முழுவதும் நான்காயிரம் தேர்தல் கண்காணிப்பாளர்கள்: பெப்ரல் நடவடிக்கை
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் நான்காயிரம் தேர்தல் கண்காணிப்பாளர்களை பெப்ரல் அமைப்பு பணியில் ஈடுபடுத்தவுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல் சர்வதேச மட்டத்தில் முக்கியத்துவமிக்க தேர்தல் இல்லை என்பதன் காரணமாக இந்தத் தேர்தலின் போது வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கண்காணிப்பாளர்கள் நியமனம்
அவ்வாறான நிலையில் நாடு முழுவதும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்காக நாடு முழுவதும் சுமார் 3,000 கண்காணிப்பாளர்கள் பெப்ரல் அமைப்பினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு மேலதிகமாக தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக 800 க்கும் மேற்பட்ட நடமாடும் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பெப்ரல் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
