இன்றிரவுடன் தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட வேண்டுமென அறிவிப்பு
வாக்கெடுப்புக்கு 48 மணிநேரத்துக்கு முன்னர் அதாவது இன்று, மே மாதம் 3ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள், குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 3ஆம் திகதி நடைபெறும் இறுதி அரசியல் பிரசாரக் கூட்டங்களின் வீடியோ காட்சிகள் மற்றும் விவரங்களை நாளை 4ஆம் திகதியன்று ஒவ்வொரு தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசையில் ஒரு பிரதான செய்தி அறிக்கையில் மாத்திரம் பிரசாரம் செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்
நாளை 4 ஆம் திகதியன்று வெளியாகின்ற செய்தித்தாள்களில் அக்கூட்டங்களின் புகைப்படங்களையும் அறிக்கைகளையும் வெளியிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அலைவரிசையோடும் செய்தித்தாளோடும் இணைந்த சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய அனைத்து சமூக ஊடக தளங்களின் நிர்வாகிகளுக்கும் இந்த நிபந்தனைகள் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
