உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 24 மணித்தியாலயங்களில் 30 முறைப்பாடுகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இன்று (28) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயங்களில் 30 முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 9 முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பில் 21 முறைப்பாடுகளும் கிடைக்கபெற்றுள்ளன.
வேட்பாளர் ஒருவரும் 7 ஆதரவாளர்களும் கைது
பதிவாகியுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் வேட்பாளர் ஒருவரும் 7 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 3ஆம் திகதி முதல் இன்று காலை வரை உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் 398 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறித்த காலப்பகுதியில் 30 வேட்பாளர்களும் 131 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |