ஊடக நிறுவன பிரதானிகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு
இலங்கை அனைத்து ஊடக நிறுவனங்களினதும் பிரதானிகள் இன்றைய தினம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. எல் ரத்நாயக்க இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு தேவையான பின்னணி
இதேவேளை, இன்று பிற்பகல் ஊடக அமைச்சின் செயலாளர், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரச ஊடகங்களின் பிரதானிகள் ஆகியோர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாளை முதல் அமைச்சர் மட்டத்தில் அமைச்சின் செயலாளர்கள், மேலதிக செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான பின்னணியை உருவாக்கும் நோக்கில் இந்த சந்திப்புகள் நடத்தப்படுவதாக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam