எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடவுள்ள பெண் படுகொலை
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடவுள்ள பெண் ஒருவர் மினுவாங்கொட பிரதேசத்தில் தனது வீட்டினுள் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை யாகொடமுல்ல பகுதியைச் சேர்ந்த சாந்தி பத்மினி என்ற 65 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொலையை செய்ததாகக் கூறப்படும் அடையாளந்தெரியாத குற்றவாளிகள் கூரிய ஆயுதங்களால் அவரை வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்
இவ்வாறு கொலை செய்தவர்கள் அவரது வீட்டுக்கும் தீவைத்துவிட்டு, பாதிக்கப்பட்டவரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவையும் எடுத்து கொண்டு தப்பியுள்ளனர்.
குறித்த பெண் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்
கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

முழுசா 10 ஆண்டுகளுக்கு பின் வரும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அதிஷ்டம் எந்த ராசிகளுக்கு? Manithan

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
