யாழில் உருக்குலைந்த நிலையில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம்(Jaffna) - கோப்பாய் பகுதியில் நேற்றையதினம்(23) உருக்குலைந்த நிலையில் வயோதிப பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கோப்பாய் - கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த பிரவுண்ராசா நாகேஸ்வரி (வயது 78) என்ற வயோதிப பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
சடலம் மீட்பு
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண்ணின் கணவர் உயிரிழந்த நிலையில் அவர் தனது சகோதரனுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றையதினம் உருக்குலைந்த நிலையில் அவரது வீட்டு கிணற்றடியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri
