யாழில் மன உளைச்சலுக்கு உள்ளான வயோதிப பெண் உயிர்மாய்ப்பு
யாழ்ப்பாணத்தில்(Jaffna), மன உளைச்சலுக்கு உள்ளான வயோதிபப் பெண்ணொருவர் 25ஆம் திகதியன்று தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ வைத்து உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுன்னாகம் கிழக்கு, குமாரசுவாமி புலவர் வீதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு மங்களநாயகி(வயது 80) என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தீ மூட்டி உயிர்மாய்ப்பு
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண்ணின் பிள்ளைகள் வேலைகளுக்கு செல்வதனால் அவர் பெரும்பாலான நேரங்களில் தனிமையில் இருந்துள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகிய நிலையில் 25ஆம் திகதி இரவு வீட்டுக்கு அருகேயுள்ள வாழைத்தோட்டத்திற்கு சென்று, மண்ணெண்ணெயை தன்மீது ஊற்றி, தீ மூட்டி உயிர்மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam