கைதடி முதியோர் இல்லத்தில் வசித்து வந்த வயோதிபப் பெண் உயிரிழப்பு!
கைதடி முதியோர் இல்லத்தில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று (17) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கரவெட்டி பகுதியைச் சேர்ந்த பரராஜசிங்கம் லோகநாயகி (வயது 71) என்ற வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் யாழ்ப்பாணம் - கைதடி பகுதியில் உள்ள அரச முதியோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த 4 நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam